ஓய்விலிருக்கும் ஒபாமா ஒப்புக்கொண்டால் நீதிபதியாகலாம்!

இரண்டுமுறை அமெரிக்க அதிபராக இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது.

ஏற்கனவே சட்டப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஒபாமா தற்போது அவர் ஓய்வு பெற்று குடும்பத்தினர்களுடன் காலத்தை கழித்து வருகிறார்.

obama-wavingஇந் நிலையில் ஒபாமா விரும்பினால் அவருக்கு நீதிபதி பதவி தர தயார் என  இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. ஒரு நீதிபதிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருப்பதால் அவருக்கு இந்த பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நீதிபதி பதவியை ஏற்பது குறித்து ஒபாமா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. நீதிபதி பதவியை ஏற்க அவர் ஒப்புக்கொண்டால் நீதிபதியாகும் முதல் முன்னாள் அதிபர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்