புலம்பெயர் தமிழர்களினால் கொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் புலம்பெயர் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கு பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

colomboமாறாக கொழும்பிலேயே அவர்களின் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் அவுரங்காபாத் நகரில் இடம்பெற்ற இரண்டாவது அனைத்துலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வடக்கு – கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதில்லை.

கொழும்பிலேயே அவர்களின் முதலீடுகள் இருந்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் கொழும்பில் பல வானுயர்ந்த கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களினாலேயே இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் எழுச்சி பெற்றுள்ளன. யுத்தம் உச்சமடைந்திருந்த போது கொழும்பில் பல அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்குவதற்கு அவர்கள் பெருமளவு நிதியை செலவிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை.

மாறாக கொழும்பிலேயே அவர்களின் முதலீடுகள் இருந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.