தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களில் கண மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்த கண மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து, பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அமெரிக்கா, லண்டனை விட அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை நீர் எங்கும் தேங்கி இருக்கவில்லை என்று கூறினார்.
ஆனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாலும், கழிவு நீர் வீடுகளில் புகுந்ததாலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு அனைவரின் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் வேலுமணியை கிண்டல் செய்து இளைஞர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அமைச்சர் வேலுமணி தனது நண்பரை கடுமையாக வசைபாடியிருக்கிறார்.
அந்த நண்பர்தான், அமைச்சர் வேலுமணி மீடியாவுக்கு பேச வேண்டியதை எல்லாம் குறிப்பு எடுத்து கொடுப்பாராம்.
அவரிடம் வேலுமணி, உதாரணம் சொல்வதை எல்லாம் உள்ளூரோடு வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்கா, லண்டன் ன்னு எழுதி கொடுத்து, நான் அசிங்கப்ட்டதுதான் மிச்சம்.
இப்போ பாருங்க, என்னை அனைவரும் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க என்று கோபத்தில் கொந்தளித்து இருக்கிறார்.
என்னதான் இருந்தாலும்.., அமைச்சர் அமெரிக்கா, லண்டனோடு சென்னையை ஒப்பிட்டு பேசியது கொஞ்சம் கூட நியாயம் கிடையாது மக்களே…