ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகளுக்கு சவூதியில் கொடூரம்!!

ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆறு மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கோரிக்கை வலுத்துள்ளது.

ShowImage-660x330சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதற்காக ஆறு மாணவிகளுக்கு கடந்த யூலை மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாத்திமா அல் குவைனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் பொலிசார் நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்த போது பாத்திமாவின் தோழிகள், மூன்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர், இதனை தொடர்ந்து அவர்களை பொலிசார் கைது செய்தனர்.

ஒரு ஆண்டாக வழக்கு நடந்துவந்த நிலையில் கடந்த யூலை மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டதுஇ ஷரியா சட்டத்தின்படி இத் தீர்ப்பை ‘ஆண்கள் மட்டும்’ ஷரியா குழு வழங்கியுள்ளது.மாணவிகளுக்கு மட்டும் தண்டனை வழங்கிய நிலையில், மாணவர்களை கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக உலகம் முழுவதிலும் குரல்கள் எழுந்தன. மிக மோசமான மனித உரிமை மீறல் என ஐ.நா சபையும் தனது கண்டனத்தையும் பதிவு செய்தது.

கடந்த யூலை மாதம் தண்டனை வழங்கப்பட்டாலும், தற்போது சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி, மைதானத்துக்குள் நுழைய அனுமதி, என பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் நிலையில் இந்த தீர்ப்பு தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.