நவம்பர் மாதம் வந்தால் பல சுவையான நிகழ்வுகள் இருக்கும். அடை மழை, குளு குளு வானிலை என இனிமையான தருணங்கள் பல உண்டு. இருப்பினும் சமீப காலமாக இந்தியாவில் மிக பிரபலம் ஆகி வருகிறது, “No Shave November”.
அதாவது, நவம்பர் மாதம் முழுவதும் ஆண்கள் மீசை தாடியை வெட்டாமல் வளர்த்து, வெட்டுவதற்கான பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்குவதே இதன் பின்னணி.
இந்த முறையானது அயல் நாடுகளில் சுமார் 10 வருடங்களாக பின்பற்றி வந்தாலும், இந்தியாவில் கடந்த 2-3 வருடங்களாக தான் மிக பிரபலம் ஆகியுள்ளது.
நவம்பர் மாதம் முழுவதும் இளசுகள் முதல் பெருசுகள் வரை தாடியை வளர்க்க துவங்கியுள்ளனர். இருப்பினும் பலராலும் இது ஒரு fashion, trend என்று தான் பார்க்கப்படுகிறது என பலர் கூறுகின்றனர்.