அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் தமது ஆண் நண்பருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
குறித்த விவகாரத்தில் 48 வயது பெண்மணியையும் 28 இளைஞரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறு அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெட்ராய்ட்டிற்கு சென்ற டெல்டா விமானச் சேவை விமானம் ஒன்றில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
டெட்ராய்டு சென்று சேர்ந்த பின்னர் இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் எனக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்மணி குறிப்பிட்ட இளைஞரை லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வைத்தே முதன் முறையாக அறிமுகமாகியுள்ளார்.
இதனிடையே இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில் தங்கள் இருக்கையில் இருந்தவாறே பாலியல் உறவு கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் விமானிக்கு தெரிய வரவே, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெட்ராய்டு பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பறக்கும் விமானத்தில் நடந்துள்ளதால் இந்த வழக்கினை மாநில பொலிசாரிடம் இருந்து எப்.பி.ஐ விசாரிக்கும் என தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்களா அல்லது தங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு புறப்பட்டு சென்றனரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.