குருணாகலில் டெங்கு நுளம்பு தாக்கத்தினால் அச்சமடைந்த மாணவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்ததாக தெரிய வருகிறது.
குருணாகல் ஸ்ரீமன் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் 2800 மாணவர்களும் 508 ஆசிரியரும் நேற்று பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்குள் பிரதி அதிபர் மற்றும் அவரது மகளும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த பாடசாலையில் கிட்டத்தட்ட 50 மாணவர்களுக்கும், 15 ஆசிரியர்களுக்கும் டெங்கு தொற்றுக்கு உள்ளான நிலையில், குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் டெங்கு நோய் தொற்று காரணமாக கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.
இந்நிலைமையில் 4200 மாணவர்களில் 1400 மாணவர்கள் மாத்திரமே நேற்று பாடசாலைக்கு வருகைத்தந்துள்ளனர். 165 ஆசிரியர்களில் 107 பேர் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை பகுதி அசுத்தமான முறையில் உள்ளமையே இதற்கு காரணம் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து சுத்தமாக சூழலை வைத்து கொண்டால் மாத்திரமே டெங்கு தொற்றில் இருந்து தப்பிக் கொள்ள முடியும் என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.