உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்!

ஒவ்வொரு ஆண்டும் இன்ஸ்டிடியூட் ஆப் எக்கனாமிக்ஸ் அண்ட் பீஸ் க்ளோபல் பீஸ் இண்டெக்ஸ் என்ற அமைப்பு, உலகிலுள்ள ஆபத்தான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

நாட்டில் நடக்கும் குற்றங்கள், வெடிகுண்டு சம்பவங்கள், கற்பழிப்பு மற்றும் தீவிரவாதம் போன்ற 23 வகையான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

வடகொரியா:

கம்யூனிஸ்ட் நாடான வட கொரியா கிம் ஜோங் வுன் தலைமையில் இயங்கி வருகிறது. இராணுவம் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதிலேயே அதிக செலவு செய்வதால், நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தைச் சென்று விட்டது.

இங்கு, மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு கொடூர தண்டனைகளும் வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான்:

இந்தியாவிடமிருந்து பிரிந்த பின் பாகிஸ்தான், மூன்று முறை போர் புரிந்ததன் காரணமாக பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வருடத்திற்கு 1500 க்கும் மேற்பட்ட தீவிரவாத சம்பவங்கள் நடக்கிறது. முக்கியமாக அங்குள்ள இளைஞர்களை தீவிரவாத பயிற்சியளித்து இந்தியா, ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்குக்கு எதிராக குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்தும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது.

டெமாக்ரேடிக் ரிபப்லிக் ஆப் த காங்கோ:

இது ஆபத்தான நாடுகளில் ஒன்றாக மட்டுமில்லாமல், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடாக விளங்குகிறது. பெண்களுக்கு சம உரிமை இல்லாமை, சரியில்லாத மருத்துவ துறை, வறுமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் காங்கோவை ஆபத்தான நாடாக மாற்றியுள்ளது.

சூடான்:

தெற்கு சூடானைப் போலவே சூடானிலும் இனக் கலவரம் மற்றும் உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் வாழ்வதற்க்கு தகுதி இல்லாத நாடாகவும் பாதுகாப்பற்ற நாடாகவும் சூடான் மாறி வருகிறது.

சோமாலியா:

சோமாலியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர், உலகில் அதிக நாட்களாக நடைபெற்று வரும் போராகும்.

பல தீவிரவாத குழுக்களுக்கு இடையே நடைபெறும் சண்டை சோமாலியா நாட்டை சீரழித்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்லிக்:

தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இடையே ஆன சண்டையே சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்லிக் நாட்டை ஆபத்தான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

தெற்கு சூடான்:

தெற்கு சூடானில் 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் உள்நாட்டுப்போரினால் இறந்துள்ளனர். இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வ குடி மக்களான, மலைவாழ் பழங்குடியினர் ஆட்சியை பிடிக்க நினைப்பதே இந்த உள்நாட்டுப்போருக்கான காரணம்.

ஆப்கனிஸ்தான்:

மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ தலையீடுகள் ஆப்கனிஸ்தானை மிகவும் ஆபத்தான நாடாக மாற்றியுள்ளது.

ஈராக்:

உலக நாடுகள் அனைத்திற்கும் எதிராக இங்குள்ள ஐ.எஸ் இயக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அனைத்து நாடுகளை சேர்ந்த ராணுவங்களும் குண்டு மழை பொழிந்து அந்த நாட்டையே ரத்தக்காடாக மாற்றி வருகிறது.

சிரியா:

சிரியாவே ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதன்மையான நாடாக விளங்குகிறது. 2008 ஆம் ஆண்டு 88 வது ஆபத்தான நாடாக விளங்கிய சிரியா தற்போது முதன்மையான நாடாக விளங்குகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமே என்பது அனைவரும் அறிந்ததே.