•
கப்பம் கேட்டு சாரதி கடத்திய ஆயுத கும்பலோடு மது அருந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி
· 30 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தம் பேசி சகோதரியை பிரான்ஸிற்கு அனுப்பி வைத்துவிட்டு, ஏஜென்சிகாரனை ஏமாற்றிய குடும்பம்.
• பிரான்ஸில் உள்ள சகோதரியிடமே குறித்த ஆயுதக் குழு கப்பம் கேட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரை கடத்திய ஆயுத கும்பல் குறித்த சாரதியை கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து துன்புறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளனர்.
ஆயுத கும்பலால் கடத்தப்பட்டவர் 28 வயதுடைய எலிஸ்டன் விமல் என்பவராவார்.
விடுவிக்கப்பட்ட விமல்
“தன்னோடு இன்னும் இரண்டு இளைஞர்களை குறித்த வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர்களிடமும் கப்பம் கேட்டு ஆயத கும்பல் துன்புறுத்தியதாகவும் அதற்கு குறித்த இரு இளைஞர்களும் இங்கிலாந்திலுள்ள தமது உறவினர்களிடம் பணம் கேட்டு இருப்பதாகவும் கூறினார்கள்.
என்னை கடத்திய ஆயுதக் கும்பலுக்கும் கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றது.
மேலும் என்னை அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் வந்து மது அருந்தி விட்டு செல்வார்
என்னை கடந்த 28ஆம் திகதி இரவு ஆமர் வீதி பன்சாலைக்கருகில் வைத்து இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கொழும்பு பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருக்கம் போது காரில் நால்வரும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் இருந்து மேலும் அறுவரும் பின்னால் வந்தனர்.
அவர்களிடம் கத்தி பெரிய இரும்பு ஆயுதங்கள் மற்றும் பெரிய சங்கிளிகள் என்பன இருந்தன. அந்த ஆயுதக் குழுவினர் என்னை இழுத்து காரினுள் தள்ளி கடத்திச சென்றனர். காரின் பின்னால் இரண்டு முச்சக்கர வண்டிகளும் பின் தொடர்ந்தன.
கொச்சிக்கடை பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ள வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கே என்னை கடத்திச் சென்று அடைத்து வைத்தனர். அங்கு 25க்கும் மேற்பட்ட ஆண்கள் இருந்தனர்.
அவர்கள் நன்றாக மது அருந்தி மது போதையில் இருந்தனர். அங்கு இருந்தவர்களில் ஒருவர் என்னை இரும்பு கம்பியால் தாக்கினார் அவர் தாக்கியதில் தலை காயமடைந்தது.
இவர்கள் என்னை ஏன் கடத்தினார்கள் என்று முதலில் நான் அறிந்திருக்க வில்லை பிறகு தான் தெரிந்து கொண்டேன் அவர்கள் ஏஜன்ஸி ஒன்றை நடத்தி வருகிறார்கள் 30 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரிலேயே அவர்கள் எனது சகோதரியை பிரான்ஸிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஓப்பந்த தொகையின் ஒரு தொகை பணத்தை பெற்றுக் கொண்டு பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி இத்தாலிக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.
இத்தாலி விமான நிலையத்தில் வைத்து எனது சகோதரியை அந் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவை அனைத்தும் நடந்து முடிந்து பல வருடங்கள் ஆகின்றன. அக்கா கொடுக்க இருந்த மிகுதி பணத்தை பெறுவதற்காகவே என்னை கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
நான் அவர்களுக்கு 20 இலட்சம் ரூபா பணம் கொடுக்க இருப்பதாக கூறி என்னிடமிருந்து கடிதமொன்றில் கையெழுத்து கேட்டு என்னுடைய காலை வெட்டுவதாக கூறி மிரட்டினர் அதனால் நான் அக் கடிதத்தில் கையெழுத்திட்டேன்.” என பொலிஸாரிடம் தெரிவித்தார்.
குறித்த இளைஞனை விடுவிக்க பிரான்ஸில் உள்ள சகோதரியிடமே குறித்த ஆயுதக் குழு கப்பம் கேட்டுள்ளனர்.
சகோதரியிடம் சகோதரனை விடுவிக்க கப்பம் கேட்டு மிரட்டிய விடயத்தை அவர் வவுனியாவிலுள்ள தனது தாய்க்கு கூறியுள்ளார்.
விடயம் அறிந்த தாய் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே ஹெட்டியாவத்தை சந்தியில் இரவு 8.30 மணியளவில் குறித்த இளைஞனை விடுவித்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்;கின்றனர்.
மேலும் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
• ஏஜென்சிகாரர்கள் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றுகின்ற செயல் ஒருபுறமிருக்க, ஏஜென்சிக்காரர்களிடம் தந்திரமாகபேசி வெள்நாட்டுக்கு வந்து இறங்கியவுடன் ”குட்பாய்” சொல்லிவிட்டு தலைமறைவாகிவிடும் ‘நம்பிக்கைத் துரோகிகள்’ நிறையபேர் வெளிநாடுகளில் சுந்திரமாக வாழ்கின்றார்கள்.
நம்பிக்கை துரோகம் செய்பர்களிடம் எப்படி காசுவாங்குவது???