இல்லை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்,உச்சகட்ட கோபத்தில் உள்ள ஓபிஎஸ் -இபிஎஸ், இனி மோடியை யாரும் புகழ்ந்து பேசக்கூடாது என உத்தரவு போட்டுள்ளனர்.
இனி மோடியை புகழ்ந்தோ, மோடி இருக்கிறார் என்று மார்தட்டியோ யாரும் பேசக்கூடாது என்று அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கு ஒபிஎஸ் -இபிஎஸ் தரப்பு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடி ஆட்சியில் இருக்கும் வரை எடப்பாடி அரசுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றும், எங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் அவர் பார்த்துக்கொள்வார் ” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி சர்ச்சைகள் உருவாகி ஓய்ந்த நிலையில், இப்போது சட்ட ரீதியாக சங்கடத்தில் நெளிகிறது ஒபிஎஸ் -இபிஎஸ் அணி.
அதிமுகவின் வெற்றி மேஜிக்கான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில்,அதை மோடி ஆதரவோடு மீட்டு விடலாம் என ஒபிஎஸ் -இபிஎஸ் தரப்பு நினைப்பதாக ஊடகங்களிலும், பொது வெளியிலும் கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை பதிவு செய்த தினகரன் தரப்பு இரட்டை இலை தொடர்பாக தேர்தல் கமிஷனில் நடக்கும் விசாரணையில் அதையே ஆதாரமாக வைத்து வாதாடி வருகிறது.
எப்பப்பார் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதெல்லாம் “இலை எங்களுக்குத்தான்” “எங்களுக்குத்தான் இலை கிடைக்கும்”என்று தொடர்ந்து பேசி வருவதை சுட்டிக்காட்டிய தினகரன் தரப்பு. இது விசாரணையில் அழுத்தங்களை ஏற்படுத்தாதா என்று விவாதிக்க அதை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாகவும் இன்று விசாரிக்க இருக்கிறது.
இன்றைய விசாரணை முடிவில் இரட்டை இலை ஒபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தாலும் அந்த தீர்ப்பின் மீது சந்தேகம் படரும் படி இவர்களின் பேச்சு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் கருத்து உள்ளதால். ஒபிஎஸ் -இபிஎஸ் தரப்பு அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் மோடி பற்றி பேச வேண்டாம் என்று உத்தரவிட்டிருக்கிறார்களாம்.அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் விளக்கம் கொடுத்தது இதற்க்காகத்தானாம்.
இதனால்,இலை கிடைக்கும் வரை ஒபிஎஸ்- இபிஎஸ் தரப்பிலிருந்து இனி யாரும் மோடியை பற்றி வெளிப்படையாக பேசமாட்டார்கள்.