இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்!

இன்னமும் அனுமான் உயிருடன் உள்ளாரா? நாம் வாழும் இந்த உலகத்தில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஆஞ்சநேயர் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி மற்றும் சேவையின் சின்னம் என்பதால் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுவோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவம் அவர்.

Capturefxcgbசரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா? சாகா வரத்தை பெற்றுள்ளதால், அவர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகிறது. ஆஞ்சநேயர் உயிருடன் இருப்பதற்கான சில ஆதாரங்களும், அறிகுறிகளும் இருக்கத் தான் செய்கிறது. பனி படர்ந்த மலைகளில் மிகப்பெரிய பாத அச்சுக்களைக் கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர். அப்படியானால் இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா?

hanuman

hanuman1

இறவாதவர் ஆஞ்சநேயர்
சமயத்திரு நூல்களின் படி, ஆஞ்சநேயர் இறவாதவர். அவர் ராமாயணம் காலத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட, மகாபாரதம் காலத்திலும் கூட வாழ்ந்துள்ளார். அதனால் அவர் சிரஞ்சீவியாக இருப்பதற்கு இது ஒரு அத்தாட்சியாகும்.

அவர் ஆசீர்வாதிக்கப்பட்டவர்
இந்த உலகம் அழியும் வரையில் ராமபிரானின் அனைத்து பக்தர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கால் தடங்கள்
இந்தியாவின் சில பகுதிகளில் ராட்சச கால் தடங்கள் உள்ளது. அவை ஆஞ்சநேயருடையது என நம்பப்படுகிறது.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் உள்ள கண்டமத்தனா மலைகளில் அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சில மூலங்கள் திடமாக நம்புகிறது.

சமயத்திரு நூல்கள் கூறுவது என்ன?
அனைத்து இந்து மத சமயத்திரு நூல்களை ஒருவர் கவனமாக தேடினாலும், ஆஞ்சநேயரின் மரணத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுப்பிடிப்பது கஷ்டமாக இருக்கும். அப்படியானால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தானே அர்த்தம்.