இன்றும் தொடரும் இடைக்கால அறிக்கை மீதான விவாதம்!

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்றும் நடைபெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று அறிவித்துள்ளார்.

karu (1)கடந்த 30ஆம் நாள் அரசியலமைப்பு பேரவையாக கூடிய சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாததம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் இந்த விவாதம் நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றுடன் முடிவடைவதாக இருந்த விவாதம் இன்றும் தொடர்ந்து இடம்பெறும் என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

விவாதத்தில் உரையாற்றுவதற்கு பெருமளவு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்தே, விவாதம் நீடிக்கப்பட்டுள்ளது.

தினமும், காலை 10.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8 மணி வரை விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.