இந்தியாவில் தாய் இறந்த விடயம் கூட தெரியாமல், அவரது மகன் நான்கு நாட்கள் அவருடனே தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் பைக்கப்பரா பகுதியில் வசித்து வருபவர் மிரா பாசு (67). இவருக்கு மனநிலை சரியில்லாத அனிர்பன் பாசு என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் மிரா பாசு-வின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறி, அருகில் இருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பின் அப்பகுதிக்கு வந்த பொலிசார் அங்கிருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்த போது மிரா பாசு இறந்து கிடந்தது தெரியவந்தது.
ஆனால் அவரது தாய் இறந்தது தெரியாமல், அதே வீட்டின் மற்றொரு அறையில் அவரது மகன் அனிர்பன் பாசு அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது சடலத்தின் நிலையை பார்த்த பொழுது மிரா இறந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் இருக்கும் என்றும் பொதுவாகவே அனிர்பன் பசுவை அவரது தாயார் அறையில் அடைத்து வைத்திருப்பதன் காரணமாகவே அவருக்கு தாயார் இறந்தது தெரியவில்லை என்று அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.