கேரள மாநிலம் முழுவதுமாகச் சுமார் 350-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. அங்கு பிராந்தி, ரம், பீர், விஸ்கி உள்ளிட்ட இந்திய தயாரிப்பு மது வகைகளும் வெளிநாட்டு மது வகைகளும் கேரளா மதுபான விற்பனை கழகம் சில்லரை விற்பனை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் ஆண்டு ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. அதைத் தொடர்ந்து மதுபானத்தின் விலைகளை உயர்த்த தற்போது கேரள அரசு மதுபான விற்பனைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலையை உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தன் மூலம், கேரள மாநில அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 14,000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த விலை உயர்வு கேரள மதுப்பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக அரசு விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கேரள எல்லையோர மதுப் பிரியர்கள் கேரள மதுபான கடைகளுக்குச் சென்று மது வாங்கிக் குடித்து வந்தனர். தற்போது கேரளாவிலும் மதுபான விலை உயர்ந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டக் குடிமகன்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.