உள்ளூராட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் டிச. 11 – 20 வரை!

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான திகதியையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-31ஆம் திகதிகளுக்குள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனினும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் தெரியவருகிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் அடுத்த மாதம் – டிசம்பர் – 11 முதல் 20ஆம் திகதிக்குள் கையளிக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

voting-vote-election