தமிழகத்தில் மழை வாட்டி வதைத்து வரும் வேளையில் உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம் இந்தியாவை நிலைகுலைய செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்து சிதறியதில் 25 பேர் பலியானார்கள் மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறனர்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.
இந்த அனல் மின் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் தான் திறக்கப்பட்டது. அதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் நேற்று பேரிடரை எற்படுத்தும் வகையில் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் நிகழ்விடத்திலேயே 16 பேர் பலியாகினர். மேலும் சிறுக சிறுக அதிகரித்து தற்போது 25 உயிர்கள் பறிபோய் உள்ளது.
அனல்மின் நிலையத்தில் இன்னும் சில உடல்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை.
பலியானவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு கருகிவிட்டன. காயம் அடைந்தவர்களில் 4 அதிகாரிகளும் அடங்குவர்.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.