குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் இணையத்தளம் ஊடாக உதவி கோரியுள்ளார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் குவைத் சென்ற பெண் ஒருவரே இவ்வாறு உதவி கோரியுள்ளார்.
தான் குவைத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் தன்னை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த செனவிரத்ன எனவும் தான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் குவைத் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களில் இருந்து தன்னை காப்பாற்றி இலங்கைக்கு வருவதற்கு உதவுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் உதவி கோரி இரகசிமாக காணொளி ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.