சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : தப்புமா சென்னை..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

ஒருநாள் மழைக்கே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் வெள்ளம் ஏற்பட்டது போன்று காட்சி அளிக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு வந்த வெள்ளம் போன்று இந்த ஆண்டும் வந்துவிடுமோ என்று சென்னை மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதே போன்று அடுத்து இரண்டு புயல்கள் உருவாகும் என்று முன்னாள் இயக்குனர் ரமணனும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த முறையும் வெள்ள அபாயம் இருப்பதாக லண்டன் பிபிசி வானிலை செய்தி வெளியிட்டுள்ளது.

Capturevfccஅந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெற்காசியாவில் பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

சென்னையை மீண்டும் வெள்ளம் தாக்கினால் அது இயற்கை தாக்குதல் மட்டுமல்ல. அதற்கு மனித தவறுகளே காரணம் ஆகும். முதலில், குறுகிய காலத்தில் பெருமழை பெய்வதற்கு சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்பட்ட காலநிலை மாற்றம்தான் (Climate Change) காரணம்.

அடுத்ததாக, இந்த பெருமழையை கொஞ்சம் கூட சமாளிக்க முடியாமல் தடுமாறுவதற்கு முற்றிலும் செயலற்றுப் போன அரசு தான் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

1449031680-3261