இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கட்டாக்காலி மாணவிகள்.

சபரகமுவ மாகாணத்தின் பிரபல மகளீர் பாடசாலை மாணவிகள் 4 பேர், கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக சக மாணவி ஒருவர் கேகாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மாணவி, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் 4 மாணவிகளது நண்பர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதோ ஓர் காரணத்தினால் இருவரும் கோபத்தில் பிரிந்துள்ளனர்.

0இதன் காரணமாக ஒரு சில நாட்கள் மாணவி, பாடசாலைக்கு செல்ல வில்லை என குறிப்பிப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும், இடையிலான பிரச்சினையினை, தீர்ப்பதற்கு மாணவியின் வீட்டுக்கு 4 மாணவிகளும் சென்றுள்ளனர்.

இதன்போது மீண்டும் காதல் உறவை தொடரும்படி மாணவியை அச்சுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு காதல் உறவை தொடர வில்லை என்றால் சில இளைஞர்கள் ஊடாக தாக்கி கொலை செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளதான மாணவி கேகாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.