அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்காக சந்தர்ப்பம் வழங்கிய கிறீன் அட்டை இரத்து செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை இரத்து செய்வதற்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் காங்கிரஸ் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் நகரில் மேற்கொள்ப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் சந்தேகநபர் உஸ்பகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கிறீன் அட்டை முறையில் அமெரிக்காவில் குடியேறியவர் என தெரியவந்துள்ளது.
அதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கிறீன் அட்டை வேலைத்திட்டத்தின் கீழ் பல இலங்கையர்களும் அமெரிக்கா சென்றுள்ளனர்.
நடப்பாண்டுக்கான கிறீன் அட்டை நடைமுறைக்கு அமைய பல இலங்கையர்கள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.