இந்தோனேசியாவில் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்வார்கள். டெலுக் கிஜிங் கிராமத்தைச் சேர்ந்த பான்சர், நவம்பரில் 2 பெண்களை திருமணம் செய்ய போகிறார்.
நவம்பர் 5-ல் ஒன்று, 8-ல் இன்னொன்று. நவம்பர் 9-ல் இரு திருமணங்களுக்கும் சேர்த்து ஒரே வரவேற்பு நிகழ்ச்சி.
2 பெண்களுடனும் பான்சர் இருப்பதுபோல் அச்சடிக்கப்பட்ட வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.இரண்டு திருமணங்கள் சட்டப்பூர்வமாக செய்துகொள்ள அனுமதிக்கும் ஒரு நாட்டில், ஒரே வரவேற்பு வைத்துக்கொள்வதில் என்ன அதிசயம்?
சிண்ட்ரா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர். இன்டா இதே கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணங்களை எளிமையாகவும் தனித் தனியாகவும் நடத்துகின்றோம்
வரவேற்பு மட்டும் ஆடம்பரமாக இருக்கும். இரண்டு பெண் வீட்டார்கள் சம்மதத்துடன்தான் திருமணமும் வரவேற்பும் நடக்க இருக்கின்றன.
மணப்பெண்கள் இருவரிடமும் போட்டியோ, பொறாமையோ இல்லை. இருவரின் விருப்பத்தின் பேரில்தான் திருமணம் நடக்கிறது’ என்கிறார் பான்சர்.