இரட்டை இலை இவர்களுக்கு தான் கிடைக்கும்….போட்டுடைத்து பரபரப்பு ஏற்படுத்திய இளங்கோவன்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பழனியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு ஆட்சியாளர்கள் யாருக்கும் தகுதி இல்லை. அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பொறுத்த வரையில் பிரதமர் நரேந்திர மோடி காலில் யார் விழுந்து கிடக்கின்றனரோ அவர்களுக்கு தான் சின்னம் கிடைக்கும்.

மேலும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளிக்கு சென்று படித்து வர வேண்டும். டெங்கு கொசுக்களை ஒழிப்பது தமிழக அரசின் கடமை என்பது கூட தெரியாமல் எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்ததாக கூறுவதே இதற்கு உதாரணம்.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் தார் ஊழல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மணலில் கமி‌ஷன் ஆகியவற்றை பார்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அவர்கள் யாரும் மக்களைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. இந்த அமைச்சர்கள் அனைவரும் ஒரு நாள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

1440166548-0573