நான் தேவையில்லை என கூறியிருந்தால் முன்பே விலகி இருப்பேன்.!! கலங்கும் கிரிக்கெட் வீரர்.!!!

பரோடா அணியில் இருந்து இர்பான் பதான் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ஆதங்கத்தை ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்திய அணியில் இடம் பிடிக்காததால், இர்பான் பதான் தற்போது உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

உள்ளூர் அணியான பரோடா அணியின் கேப்டனாக இர்பான் பதான் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், பதான் பரோடா அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, இர்பான் பதான் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

பரோடா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, அதனை நான் பெருமையாக கருதினேன்.

கடந்த இரண்டு மாதங்களாக, நான் வீரர்களுடன் இணைந்து கடுமையாக உழைத்துள்ளேன்.

உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே நான் தேவையில்லை என்று கூறி இருந்தால், அடுத்தவருக்கு வழி விட்டிருப்பேன்.

irfan pathanபரோடா அணிக்காக விளையாடுவது பெருமையான விசயம்.

அதனோடு அந்த அணிக்காக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.