ஒன்ராறியோவின் வடகிழக்கு பகுதியை சேர்ந்தவரும் அயராது உழைப்பவருமான ஒரு மூத்த டிரக் சாரதியும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையும் செவ்வாய்கிழமை இரவு நெடுஞ்சாலை 400ல் இடம்பெற்ற கொடூரமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 14-வாகனங்கள் குவியலாக மோதிய இந்த விபத்தில் மூவர் கொல்லப்ட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரம் மிக்க இச்செய்தியை மாகாண பொலிசார் உறுதிப்படுத்தி குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தினர்.
இவரது ஒன்பது பிள்ளைகளும் ஒன்று முதல் 16-வயதிற்குட்பட்டவர்கள்.
பென்ஜமின் டன் என்ற இவர் குடும்பத்தில் உழைக்கும் ஒரே ஒரு நபராவார். 10வருடங்களிற்கு மேலாக ஒரு நீண்ட தூர டிரக் சாரதியாக பணிபுரிந்தவர். அத்துடன் சுரங்க தொழிலாளியாகவும், வெல்டராகவும் பணிபுரிந்தார் என இவரது மனைவி நிக்கியா முலாக்-டன் தெரிவித்தார்.
விபத்த நடந்த நெடுஞ்சாலை 24-மணித்தியாலங்களிற்கு மேலாக மூடப்பட்டிருந்தது.
நெடுஞ்சாலை பூராகவும் எரிவாயு மற்றும் தீப்பிழம்பு அலைகள் எழுந்த வண்ணம் காட்சியளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுப்புற துப்பரவிற்காக நெடுஞ்சாலை வியாழக்கிழமையும் மீண்டும் சில மணி நேரம் மூடப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
மோதலிற்கான காரணம் தெரியவரவில்லை எனினும் போக்குவரத்து லாரியின் சாரதி ஒருவர் மெதுவான போக்குவரத்திற்குள் மோதியதாக பொலிசார் கருதுகின்றனர்.
இச்சம்பவத்திற்கு சில நாட்கள் முன்னர் மாகாண பொலிசார் கவனம் திசை திருப்பிய டிரக் சாரதிகளினால் ஏற்படும் கொடிய மோதல்கள் குறித்து எச்சரிக்கை அலாரம் விடுத்திருந்தனர்.