கொழும்பில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய திருடர்கள்!

கொழும்பில் திருடர்கள் இருவர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த சீ.சீ.டீ.வி கமராவில் சிக்கியுள்ளது.

கொழும்பு, விஜேராம பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைத் தொடர்பு கடைக்குள் இரண்டு திருடங்கள் நுழைந்துள்ளனர்.

Capturecxvஇளம் வயதுடைய இளைஞர்களான இவர்கள் கடைக்கு அருகில் இருந்த மின்சார தூணின் உதவியுடன் கடைக்குள் நுழைந்துள்ளனர்.

எனினும் இந்த இளைஞர்கள் கடையில் இருந்த பெறுமதியான எந்தவொரு பொருட்களையும் எடுத்து செல்லவில்லை.

கடையில் இருந்த ஏதோவொரு பொருளை எடுத்துவிட்டு பணத்தாள் போன்ற ஒன்றை மேசை மீது வைத்து செல்லும் காட்சி அந்த சீ.சீ.டீ.வியில் பதிவாகியுள்ளது.

பெறுமதியான பொருட்களை திருடாமல் வெறும் மீள்நிரப்பு அட்டைகளை மட்டும் எடுத்துச் சென்ற திருடர்களின் செயல் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.