திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளது, அதனை சில நடிகைகள் வெளியில் சொல்லி விடுகிறார்கள் ஆனால் சிலர் சொல்வது இல்லை என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிகைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடந்து கருத்து தெரிவித்த அவர் “சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனக்கு தெரிந்தது.
ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வழியை பொறுத்துத்தான் நல்லதும் கெட்டதும் வருகின்றன என்பது எனது கருத்து.
2005ஆம் ஆண்டு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானேன். 12 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்து இப்போதுவரை தவறான கண்ணோட்டத்தோடு என்னை யாரும் அணுகவில்லை.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி ஹிந்தி திரையுலகிலும் இருக்கிறது. சில நடிகைகள் அதை வெளியில் சொல்லி விடுகிறார்கள். இன்னும் சிலர் சொல்வது இல்லை”.இவ்வாறு தெரிவித்துள்ளார்.