செயல் தலைவரை வீழ்த்த எடப்பாடி எடுத்துள்ள அதிரடி முடிவு!!

திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து யார் என்ற போட்டியில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

ஆனால், மத்திய அமைச்சராக இருந்த அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். கனிமொழி ராஜ்ய சபா எம்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் உடகங்களில் வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின்.

தற்போது அக்கட்சியின் தலைவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால், கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியை வழிநடத்தி வருகிறார்.

சமீப காலங்களாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்றே எடப்பாடி அரசுக்கு எதிராக ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் அழகிரியை அரசியலுக்கு இழுத்து, அதன்மூலம் ஸ்டாலினை சமாளிக்க வேண்டும் என்ற நோக்கில் அவரை புகழ்ந்து பேச எடப்பாடி அணி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், மதுரையில் அம்மா எலிசபெத் ஜெயசீலி அறக்கட்டளை சார்பில் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, எத்தனையோ பேரை வாழவைத்தவர் அழகிரி என்று புகழ்ந்து பேசினார்.

அதிமுகவில் இருக்கும் யாரும் மற்ற கட்சியினரை புகழ்ந்து பேச கட்டுப்பாடு இருக்கும் நிலையில், இப்போது அமைச்சர் ஒருவரே அழகிரியை புகழ்ந்து பேசியிருப்பது திமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.