தெரியாமல் போட்ட 12-ஆல் இபிஎஸ்-ஓபிஎஸ்ஸை நோக்கி வரும் சிக்கல்..!!

அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப் 12 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தப் பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் நியமனம் செல்லாது என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சார்பில் சென்னை ஹை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் எலெக்க்ஷன் கமிஷனில் கட்சி சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், கட்சியின் வங்கி கணக்கு, ஆவணங்களை கையாள தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கட்சியின் கணக்கு வழக்குகளையும்,

கட்சியின் ஆவணங்களையும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் ஹை கோர்ட்டில் தாக்கல் செய்ய கட்சியின் தலைமைக் கழகச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் பொதுக்குழு தொடர்பாக வரும் 29ஆம் தேதிக்குள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

ஏற்கனவே பொதுக்குழுவிற்கு தடைகோரிய வெற்றிவேல் தொடர்ந்த வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானங்கள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று நீதிபதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.