ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் ஈலூரு ராணி்பேட்டாவை சேர்ந்தவர் லக்ஸ்மண் ராவ். நாலு வயது மகன் நிரிக்சன் கேட்கவே, டைமன்ட் ரிங்ஸ் என்ற சினாக்ஸ் பாக்கெட்டை வாங்கி கொடுத்துள்ளார்.
சாப்பிட்டுக்கொண்டே இருந்த சிறுவன், திடீரென மயங்கிிவிழ, மருத்துவ மனைக்கு தூக்கிக்கொண்டு ஓடியிருக்கிறார்கள்.. அங்கே பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.
உடலை பரிசோதித்ததில் நிரிக்சன் தொண்டையில், ஈமோஜி டாய் எனப்படும் சிறு பொம்மை மாட்டிக்கொண்டி ருப்பதும் அதன் காரணமாகவே அவன் மூச்சித்திணறி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது..
இதையடுத்து, கடைக்காரர், விநியோகஸ்தர் மற்றும் கம்பெனி ஆகிய மூன்று தரப்பின்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஈலூரு டிஎஸ்பி வெங்கடேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்..
குழந்தைகளை கவர பாக்கெட்டுக்குள் பொம்மையை போட்டு விற்பதில் இப்போது ஒரு உயிர் பறந்துள்ளது.
இதை விட கொடூரமான ஒன்று தமிழகத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.உலகின் ஆகச்சிறந்த பகல் கொள்ளை யாதெனில் அது கின்டர் ஜாய் சாக்லேட்டுகள் தான்.
மூட்டை வடிவில் இருக்கும் இதன் விலை… ஒன்று 40 ரூபாய். சக்தி கொடுக்கும் பத்து முட்டை விலையே 40 ரூபாய்தான் என்பதுதான் அதில் வேதனையான விஷயம்.