கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும், மகாதேவ சுவாமிகள் இல்லத் தலைவருமான இராசநாயகம் நேற்று காலமானார்.
நோய் காரணமாக நீண்டநாள் சிகிச்சை பெற்று வந்த இராசநாயகம் அவர்கள், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று காலமானார்.
இராசநாயகம் அவர்கள் பல சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தார். குறிப்பாக மகாதேவ சுவாமிகள் இல்லத்தின் ஊடாக பல்வேறு சேவைகளை வழங்கியிருந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும், குருகுலம் (மகாதேவா சைவ சிறாா் இல்லம்) சிறுவா் இல்லத்தின் தலைவருமான இராசநாயகம் அவா்கள் நேற்று(02) யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளாா்.
2009 இற்கு முன் கிளிநொச்சியில் இவரது பணி முக்கியமானது. நெருக்கடியான அக்காலத்தில் மாவட்டத்திற்கு உலருணவுப் பொருட்களை கொண்வருவது முதல் நான் பணியாற்றி ஈழநாதம் பத்திரிகை அச்சடிப்பதற்கான காகிதங்களை(paper) கொண்டு வருவது வரை அவரின் பணி காணப்பட்டது.
இந்நிலையில், அவரின் மறைவு தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பொது மக்கள், இரங்கலையும் தெரிவித்துள்ளானர்.