தந்தையின் வாகனச் சில்லில் நசியுண்ட குழந்தை! பரிதாப மரணம்!!

வீரகெடிய – அத்தனயால பிரதேசத்தில் தந்தை ஓட்டிச்சென்ற வான் சில்லில் சிக்குண்டு அவருடைய குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதில், வாகனத்தை ஓட்டிச்சென்றவரின் 4 வயதான குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று காலை கதிர்காமல் நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த வாகனத்தின் கதவு திடீரென திறந்துள்ளது.இதன்போது அத்தனயால பிரதேசத்தில் குறித்த குழந்தை மற்றும் ஒரு பெண் வீதியில் விழுந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், அதே வாகனத்தின் பின் சில்லில் சிக்குண்டு குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் வீரகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

man-holding-head-after-accident_orig