இத்தாலி கடலில் மூழ்கி பலியான 23 பேரின் உடல்கள் மீட்பு – 700 பேர் உயிருடன் மீட்பு..

இத்தாலியின் மெடிடேரியன் கடலில் மூழ்கி பலியான 23 பேரின் உடல்களை ஐரோப்பிய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் நேற்று நடந்தது. லிபியாவில் இருந்து சில படகுகளில் ஏராளமானோர் புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது படகுகளின் என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் படகுகள் கடலில் மூழ்கின. அப்போது அங்கு ரோந்து வந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்களில் 700 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், மெடிட்டேரியன் கடலில் இருந்து 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

201611060933440003_More-than-2200-migrants-rescued-in-Mediterranean_SECVPF