இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் பிரதான மொழியாக காணப்படுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் பாடசாலைகளில் கற்பித்துக்கொடுப்பதிலிருந்து பல செற்பாடுகளில் தமிழ் மொழிக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அந்த வகையில் நாடாளுமன்றில் சிங்களத்தில் உரையாற்றும் போது அவற்றுக்கு தமிழில் பின்னணிக்குரல் கொடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்களத்தில் உரையாற்றும் போது அதை தமிழ் மக்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம் என்றே கூறவேண்டும்.
இதை நிவர்த்தி செய்யும் வகையில் சிங்களத்தில் உரையாற்றும் போது அவற்றுக்கு தமிழில் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்களத்தில் உரையாற்றுவதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.