நாளை மறுநாள் கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நொவம்பர் 5ஆம் நாள் தொடக்கம் 7ஆம் நாள் வரை பங்களாதேஷ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை, தோமஸ் சானொன் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை பங்களாதேஷ் செல்லும் அவர், நாளை மறுநாள், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார்.

இவர் அமெரிக்க- சிறிலங்கா பங்காளி கலந்துரையாடலில் பங்கேற்பதுடன், சிறிலங்கா அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

thomas_shannon-