தொடர் கோரிக்கையின் பலனாக மின்சார வேலிகள் அமைப்பு

முல்லைத்தீவு – துணுக்காய், ஐயன்கன்குளம் பகுதியில் காட்டு யானைகளின் அழிவுகளில் இருந்து விவசாய செய்கைகளை பாதுகாக்கும் வகையில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், பழைய முறிகண்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

அத்துடன், குறித்த பகுதி மக்களின் வாழ்வாதாரச் செய்கைகளையும் அழித்து வருகின்றன.

இந்நிலையில் ஐயன்கன்குளம் பகுதி மக்கள் தமது பயிர் செய்கைகளையும், தமது கிராமத்தையும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து ஐயன்கன்குளம் கிராமத்தை சுற்றி காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் வகையில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

CaptureCB