சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.. குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.
இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்,
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.
படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார்.
அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.
தற்போது சமீபத்தில், மும்பையில் படேல்சிலை நிறுவ நினைத்த மத்திய அரசு சீனாவிடம், அதை தயாரிக்கும் ஆர்டரை கொடுத்தது..
அந்த சிலை தான் இந்தியாவிலேயே உயரமானது
ஆனால் அந்த சிலையில் அதிநவீன சிப்பை பொருத்தி இந்தியாவை சீனா வேவு பார்க்கக்கூடும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிப்பதாக சொல்லப்படுகிறது
எனவே சீனாவில் தயாரான சிலையை வைப்பதை தவிர்த்து,இந்திய கலைஞர்களை வைத்து இந்தியாவிலேயே படேல் சிலை தயாரிப்பதன்மூலம்,
இந்திய கலைஞர்களுக்கும் வேலைகிடைக்கும்..இந்தியாவை சீனா உளவு பார்ப்பதையும் தடுக்கலாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்..