இந்திய தலைநகர் டெல்லியில் 18 மாத குழந்தையை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தை குறித்த நபரின் குடியிருப்பு அருகே ரத்த வெள்ளத்தில் மயக்கமான நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட குழந்தை தமது குடியிருப்பின் அருகாமையில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது குறித்த நபர் அந்த குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், நேற்றைய தினம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 33 வயது நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த போது குறித்த நபரின் மனைவி தங்களது குடியிருப்பின் மொட்டைமாடியில் பணி நிமித்தம் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
கைதான நபர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வார துவக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை தாக்கி கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொள்ளையடித்தும் சென்றுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.