தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துலு, படகா மற்றும் சிங்கலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில், இன்று இவர் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவியது. இதையடுத்து இதுகுறித்து பி.சுசீலா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அமெரிக்காவில் நன்றாக இருக்கிறார். இது பற்றி டுவிட்டரில் கூறியுள்ள அவர் “நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
பி.சுசீலா கடந்த ஒரு மாத காலமாக டெலசோ மாகாணத்தில் இருந்து வருகிறார். 2 நாட்களில் சென்னை திரும்புவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.