6 மாதத்திற்குள் 123 முறை லாட்டரியில் வெற்றி பெற்ற பலே ஆசாமி: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

தந்தை மற்றும் மகன் ஆகியோர் கருப்பு பணத்தை மாற்றுவதற்காக லாட்டரியில் வெற்றி பெற்றதாக கூறி சிக்கிக் கொண்ட சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Birmingham பகுதியைச் சேர்ந்த Malik Abdullah Farooq(81), இவரது மகன் Kashaf Ali Khan(44) ஆகியோர் கறுப்பு பணம் மாற்றிய குற்றத்திற்காக கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

Malik Abdullah Farooq(81) இவருக்கு தொடர்ந்து 123 முறை பாகிஸ்தானிய லாட்டரி சீட்டில் பணம் விழுந்துள்ளது. ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் இருக்கலாம், அதற்காக இப்படி ஒரு அதிர்ஷ்டமா என்று சந்தேகத்தின் பேரில் National crime agency விசாரணை மேற்கொண்ட போது தான் அவர் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Malik Abdullah Farooq தன்னிடம் இருக்கும் கறுப்பு பணத்தை மாற்றுவதற்காக பாகிஸ்தானி லாட்டரி சீட்டில் வெற்றி பெறுபவர்களை தேடிப்பிடிப்பார். ஏனெனில் லாட்டரியில் வெற்றி பெறுபவர்களுக்கு அந்த நிறுவனம் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் கொடுக்கும்.

ஆனால் மாலிக்கோ அவர்களை பிடித்து அவர்களிடம் உடனடியாக தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த லாட்டரியின் எண்ணை பெற்றுக் கொண்டு பணத்தை பெற்றுள்ளார். இதே போன்று 123 முறை அதாவது கடந்த 2012-ஆம் ஆண்டு ஜுலை முதல் 2013 பிப்ரவரி வரை என ஆறுமாத இடைவெளியில் இந்த செயலைச் செய்துள்ளார்.

மாலிக் இதை எல்லாம் நன்றாக திட்டமிட்டே செய்துள்ளார் என்றும் லாட்டரியில் வெற்றி பெற்றதற்கான ஆதரங்கள் என அனைத்தையும் சரியாக வைத்துள்ளார் என்று நினைத்த போது, Kashaf Ali Khan தான், அவரது தந்தையின் பெயரில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

தற்போது சிக்கியுள்ள, Kashaf Ali Khan இதற்கு முன்பும் கருப்பு பணம் மாற்றிய வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு Kashaf Ali Khan தன்னிடம் இருந்த £74,830-ஐ மாற்ற முயற்சித்த போது மாற்றிக் கொண்டார்.

இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனுக்கு நீதிமன்றம் £175,000 அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

அதையும் அவன் 12 மாதங்களுக்குள் கட்டியுள்ளான். போதிய வருமானம் இல்லாத போது இவன் எப்படி இவ்வளவு தொகை கட்டினான் என்று விசாரித்த போது, செலுத்திய அபராதத் தொகையும் கறுப்பு பணம் தான், அதன் பின் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த அவன் தற்போது மீண்டும் சிக்கியுள்ளான்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் Kashaf Ali Khan 22 மாதம் சிறைதண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.