மினுவாங்கொட 18 ஆவது மைல்கல் பகுதியில் டிரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
டிரக் வண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த தூணில் மோதி அங்கிருந்த மின்மாற்றி டிரக் வண்டியில் விழுந்துள்ள நிலையில், டிரக் வண்டியின் முன்னால் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் மஹவ, நாவலபிட்டி மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்த 26, 27 மற்றும் 54 வயதானவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.