முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.
வித்தியா படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தற்போது அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்கின்றனர்.
இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது. அதற்கு அவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியின் செய்தியாளரிடமும் நேற்று மாலை வாக்குமூலம் பெறப்பட்டது.