திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இறுதி சடங்குக்காக சென்ற குடும்பத்தினர் கார் மீது லொறி மோதியதில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்தனர்.
திருப்பூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் ராமநாதன். இவரது அண்ணன் இறந்ததை தொடர்ந்து, அவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் காரில் திண்டுக்கல்லுக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது, முன்னே சென்ற லொறியை முந்த முயன்ற போது எதிர்முனையில் வந்த லொறி கார் மீது மோதியது.
இதில் கார், சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த அவரது மனைவி சத்யா, பிள்ளைகள் நிதின்குமார் மற்றும் துவாரிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி இறந்தனர்.
ராமநாதன், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.