மழை வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள பொலிசாருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொலிஸ் உயரதிகாரிகளின் முயற்சியில் குடிசைப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பொலிசார் நிவாரணப் பணிகளை முன்னெடுத்தனர்.
இவர்களுக்கு கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அழைப்புக்கு அப்பாற்பட்டு கடமையாற்ற வந்ததற்கு மிக்க நன்றி.
நல்ல குடிமகனின் அழகு சீருடை இல்லாமலோ அல்லது சீருடையுடனோ கடமை செய்து நிரூபிப்பதுதான். இதே போன்று அதிக அளவில் தமிழர்கள் தங்களுடைய கடமையை ஆற்ற முன் வர வேண்டும்.
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை என தெரிவித்துள்ளார்.