கடந்த நான்கு தினங்களாக சென்னை உட்பட பல பகுதிகளை கனமழை வாட்டி வதைத்து வருகின்றது.
இதனால் பல்வேறு இடங்களும் நீரில் மூழ்கியுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சில மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதில் சென்னை மெரீனா கடற்கரையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது.
இதேவேளை அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.