தொடர்ந்து பெய்த மழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
இந்நிலையில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடே இவ்வாறு வெள்ளம் தேங்கி நிற்க காரணம் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இப்படியான தருணத்தில் மக்களின் மனங்களை வென்ற காவல்துறையினரின் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஈ.வே ராசா சாலையில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்லமுடியாது இருந்த நிலையில் இதை அவதானித்த காவல்துறை ஆய்வாளர் திரு.வீரகுமார் அவர்கள் மேலும் இரு காவல்துறையினருடன் களத்தில் இறங்கி கால்வாய் அடைப்பினை கையினால் சரிசெய்துள்ளனர்.
இதன்போது அவர்கள் கையுறை கூட அணியாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது சாலையில் செல்வோரை மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இவர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.