இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், ரசாயன அமிலத்தை மர்ம உறுப்பில் ஊற்றி பழி தீர்த்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பெஹ்ரின் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடந்துள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான குறித்த பெண் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவத்தன்று வேத்பால் என்பவர் தமது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆத்திரம் அடங்காத வேத்பால், மறைத்து வத்திருந்த ஆசிட் போத்தலை திறந்து தமது மனைவியின் மர்ம உறுப்பு பகுதியில் வீசியுள்ளார்.
இதில் கடும் அவதிக்குள்ளான அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை துவங்கிய பொலிசாருக்கு, பாதிக்கப்பட்ட பெண்மணி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை அளித்தது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் ஆசிட் வீசியிருக்கலாம் என பொலிசார் கருதினர்.
ஆனால் உறவுக்கு மறுத்ததால் தான் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது என்பது பின்னரே தெரிய வந்தது. தற்போது மனைவி மீது ஆசிட் வீசிய வேத்பால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் ஆகியோரை பொலிசார் தேடி வருகின்றனர்.