கமல் சுட்டுக்கொல்லப்பட போகிறார்! அதிர்ச்சியில் மக்கள்!

இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபா தெரிவித்துள்ளது.

பிரபல வார இதழ் ஒன்றில் கமல் எழுதி வரும் தொடரில், ”இந்து  தீவிரவாதம் இல்லை என்று இனியும் சொல்ல முடியாது என்றும், வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்”. இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ”நடிகர் கமல் மற்றும் அவரைப் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது துாக்கிலிடப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் மற்றவர்களுக்கு பாடம் கிடைக்கும்” என்று இந்து மகாசபா அமைப்பின் துணை தலைவர் பண்டிக் அசோக் சர்மா கூறியுள்ளார்.

மீரட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்து மத உணர்வுகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்த புனித பூமியில் வாழ உரிமையில்லை . அவர்களுடைய கருத்துகளுக்காக கொல்லப்பட வேண்டும். கமல் ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை அனைத்து கட்சி உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும். அனைத்து இந்திய மக்களும் கமலின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கோள்கிறோம். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு  மன்னிப்பு கிடையாது” என்று தெரிவித்தார்.

NTLRG_20170830205253493181