அநாகரிகமாக நடந்துக் கொண்டதாக மாணவி மீது அதிபர் குற்றச்சாட்டு!

பொலன்னறுவை – ஹிங்குரக்தமன மஹா வித்தியாலத்தின்னுள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி மாணவி ஒருவருக்கு இரண்டு வாரங்கள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (9)தனக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மாணவி. கடந்த 19 ஆம் திகதி பாடசாலை முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தான் பாடசாலையினுள் இருந்ததாகவும், வேறு ஒரு மாணவியும் மாணவனுமே இப்படி நடந்து கொண்டதாகவும், கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி குறித்த அதிபர் அந்த மாணவி மற்றும் தந்தையையும் அழைத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.

எனினும் தனது மகள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வில்லையெனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை முன்வைக்காமை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப் பிரச்சினை தொடர்பில் குறித்த அதிபரிடம் வினவிய போது, மாணவி தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது காதல் கடிதம் ஒன்று கிடைத்ததன் காரணமாக இந்த வகுப்பு தடை விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அந்த மாணவியும் அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் குறித்த மாணவி பொலன்னறுவை வலயக் கல்வி பணிமனையில் நேற்று எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.