மும்பையின் தானே பகுதியை சேர்ந்த இளைஞர் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை நேற்று துவங்கியது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஐபோன் X விற்பனை துவங்கியுள்ளது.
ஒவ்வொரு முறை புதிய ஐபோன் விற்பனை துவங்கும் போதும் ஆப்பிள் ப்ரியர்களின் அதீத ஆர்வம் செய்திகளாக உலா வருவதை வாடிக்கையான விஷயமாகும்.
சிலர் விற்பனைக்கு ஓரிரு நாட்கள் முன்பே ஆப்பிள் ஸ்டோர் வாயிலில் காத்திருந்து முதலாவதாக ஐபோன் வாங்கிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆப்பிள் பிரியர் தான் விரும்பும் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் ஆரவாரமாய் சென்றுள்ளார்.
அதன்படி மும்பையேின் தானே மாவட்டத்தில் ஐபோன் X பெற சரியாக 6.30 மணிக்கு வந்தடைந்தார். கடையினுள் செல்லாமல், குதிரையில் அமரந்த படியே அவருக்கு புத்தம் புதிய ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் வரலாற்றில் மிகவும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
இதை குறிக்கவே ஐபோன் X என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் X (64 ஜிபி) மாடல் விலை ரூ.89,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகில் விற்பனை துவங்கிய பெரும்பாலான நாடுகளில் புதிய ஐபோன் X வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்ற சம்பவங்கள் அரங்கேறின. இந்தியாவிலும் ஏர்டெல் தளத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் X சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது.
ஐபோன் X ஸ்மார்ட்போன் வாங்க குதிரையில் சென்ற வாலிபரின் வீடியோவை கீழே காணலாம்..,