கணவன் உயிரிழந்து 12 ஆவது மணித்தியாலத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் இடம்பெற்றது.
இதே இடத்தைச் சேர்ந்த சிவக்கொழுந்து இராஜேஸ்வரன் (வயது–90)இஅவரது மனைவி திருமதி செல்வ பாக்கியம் இராஜேஸ்வரன் (வயது–83) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
‘இராஜேஸ்வரன் இருதய நோயால் கடந்த மாதம் இடைக்கிடையே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.அவரின் உடல் நிலை மோசமாகிய நிலையில் தான் தனது வீட்டில் உயிரை விட ஆசைப்படுவதாகத் தெரிவித்து மீண்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவரின் உடல்நிலை மோச மடைவதை அவதானித்த அவரது மனைவி மனதளவில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.
கடந்த 26 ஆம் திகதி மாலை செவ்வாய்க்கிழமை இராஜேஸ்வரனுக்கு மூன்றாவது தடவையாக மாரடைப்பு வந்துள்ளது. செல்வபாக்கியத்துக்கும் முதலாவது தடவையாக மாரடைப்பு வந்துள்ளது.
ஆகவே, இவர்கள் இருவரையும் உறவினர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த 31ஆம் திகதி கணவன் முற்பகல் 11மணிக்கு உயிரிழந்தார். அவரது மனைவியும் அன்றிரவு 11 மணிக்கு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .